தயாரிப்பாளரிடம் சண்டை போட்ட நடிகை
நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...
தல நடிகரை ரகசியமா சந்திச்சி ரீமேக் இயக்கம் கதை சொன்னாராம்... கதை சொன்னாராம்... கதை நல்லாத்தான் இருக்கு. ஆனா என் வயசுக்கு ஏத்த மாதிரி இல்லை. வயசுக்கு தகுந்த கதை ஏதாவது இருந்தா சொல்லுங்கனு இயக்கத்தை நடிகரு திருப்பி அனுப்பிட்டாராம்... அனுப்பிட்டாராம்...
ஜெனியான நடிகை தெலுங்கு படத்துல நடிக்கிறாரு. இதோட ஷூட்டிங்கிற்காக நடிகை முதல்ல ஆந்திர தேசத்துக்கு வந்துட்டாராம். அதுக்கு பிறகு அவரோட அம்மாகுலம்
வந்தாராம்... வந்தாராம்... அம்மாகுலத்துக்கு பிளைட்ல சாதாரண டிக்கெட் எடுத்திருந்தாங்களாம். இதை கேள்விப்பட்டு தயாரிப்புகிட்ட நடிகை சண்டை போட்டாராம்... போட்டாராம்... இனிமே இப்படி நடக்காதுனு தயாரிப்பு மன்னிப்பு கேட்ட பிறகே நடிகை அமைதி ஆனாராம்... ஆனாராம்...
மலையாள படத்துல நடிக்கிற ரீம நடிகை, கால்ஷீட் பிரச்னை பண்றாராம்... பண்றாராம்... இந்திலேயும் நடிகை நடிக்கிறதால, பாலிவுட்டுக¢கே முக்கியத்துவம் தர்றாராம்... தர்றாராம்... சமீபத்துல நடிகைக¢காக மம்மூ நடிகரு ரொம்ப நேரம் காத்திருந்து, ஷூட்டிங்லேருந்து கோபமா வெளியேறிட்டாராம்... வெளியேறிட்டாராம்...