தூக்குடு தெலுங்கு படம் ஹிட்டான தால் புது படத்தில் நடிக்க சமந்தா, ரூ. 1 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் கூறியது: தெலுங்கில் வினாயக் இயக்கத்தில் ராம்சரண் தேஜா ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. கால்ஷீட் ஒத்துவந்தால் நடிப்பதாக கூறியிருந்தேன். அதற்காக கால்ஷீட் சரிபார்க்கும் வேலையில் என் மேனேஜர் ஈடுபட்டிருந்தார். அதற்குள் இப்படத்தில் நடிக்க ரூ.1 கோடி கேட்டதாக புரளி கிளப்பிவிட்டார்கள்.
எனக்கு இப்போது உள்ள மார்க்கெட் நிலவரம் என்ன என்பது தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு தெரியும். அதன்படிதான் அவர்கள் சம்பளம் தருவார்கள். அதற்குள் இப்படியெல்லாம் ஏன் புரளி கிளப்புகிறார்கள் எனத் தெரியவில்லை. ஒரே படத்தால் யார் வேண்டுமானாலும் உச்சத்துக்கு செல்லலாம். அதை தக்கவைப்பதுதான் கஷ்டம். அதனால் நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கவே விரும்புகிறேன்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook