இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் ஆட்டம் வரும் 14ம்தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. முன்னதாக இங்கிலாந்து பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம் நாளை ஐதராபாத்தில் நடக்கிறது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பிரஸ்னன் கூறுகையில், சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது சாதரணமான விஷயம் இல்லை. இங்குள்ள மைதானங்களும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்காது.
எனவே தொடர் சவாலாகவே இருக்கும். மிகவும் துல்லியமாக பந்து வீசினால் தான் சாதிக்க முடியும். இல்லையென்றால் ரன்களை வாரி இறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். பிராடு, ஆண்டர்சன் இல்லாத நிலையில் ஸ்டீபன்பின், டென்பர்க், கிறிஸ் வோகஸ் போன்ற இளம் பந்துவீச்சாளர்களை கொண்டு விரைவாக விக்கெட் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
பொல்லார்டு காயம்!
சாம்பியன்ஸ் லீக் 20-20ல் மும்பை அணி நாளை அரையிறுதியில் சோமர்செட் அணியை எதிர்த்து ஆடுகிறது. இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்த மும்பை அதிரடி வீரர் பொல்லார்டு காயம் அடைந்துள்ளார். மணிக்கட்டு பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook