அதிரடிக்கு வரிந்து கட்டுகிறது பெங்களூர் - நியூ சவுத்வேல்ஸ்!
சாம்பியன்ஸ் லீக் 20-20 தொடரில் லீக் ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் ஆரம்பமாகிறது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பெங்களூர்-நியூ சவுத்வேல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளிலும் அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை என்பதால் ஆட்டம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும்.
தில்ஷான், கோக்லி அதிரடிக்கு திரும்பியிருப்பது அணியை வலுவாக்கியுள்ளது. கெய்லின் அதிரடி எதிரணிக்கு கிலி கொடுக்கும். பின்கள வீரர்களும் நிலை மைக்கு தகுந்தபடி அதிரடி காட்டி ரன் சேர்ப்பது அணியின் அசுரபலமாக உள்ளது.
பந்து வீச்சில் வெட்டோரி சற்று நெருக்கடி கொடுக்கக்கூடும். நியூசவுத்வேல்ஸ் அணியில் வார்னர் நல்ல பார்மில் உள்ளார். சென்னை அணிக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டம் வியக்கவைத்தது. மீண்டும் அவர் ருத்ரதாண்டவம் ஆடக்கூடும். கிளார்க், ஹென்ரிக்ஸ், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரது பந்து வீச்சு சவால் கொடுக்கும்.