கடைசி ஓவரில் 2வது பந்திலும் விக்கெட் வீழ்ந்ததால் ஆட்டம் பரபரப்பின் உச்சத்திற்கு சென்றது. கடைசி ஒரு பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அருண்கார்த்திக் இமாலய சிக்சர் அடித்து வெற்றிபெற செய்தார். முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து பெங்களூர் அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆட்டநாயகன் விருதை கோக்லி தட்டி சென்றார்.
கேப்டன்ஸ் கார்னர்
வெட்டோரி: ஆட்டம் வியக்கத்தக்க வகையில் இருந்தது. இந்த மைதானத்தில் எவ்வளவு கடினமான இலக்கையும் அடைய முடியும். எதிரணியில் உள்ள ஹாரிஸ், பெர்கூசன், கிறிஸ்டியன் ஆகியோர் அருமையாக ஆடி ரன் சேர்த்தனர். பனிப்பொழிவு பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது.
பெர்கூசன்: 214 ரன்கள் குவித்தும் தோல்வியடைந்தது துரதிருஷ்டவசமானது. டெய்ட் அருமையாக பந்துவீசிய போதும் கோட்டை விட்டுவிட்டோம். கோக்லியும், தில்ஷானும் அதிரடியில் மிரட்டி விட்டனர். பனிப்பொழிவால் பந்துவீச்சில் எங்களது திட்டங்களுக்கு பலன் கிடைக்கவில்லை.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook