இந்திய அணியின் மாஜி வீரர் சுனில்ஜோஷி ஐதராபாத் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அவருடைய 19 வருட முதல்தர கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வந்துள்ளது.
ரசாக் தலைமையில் பாக்.!
ஹாங்காங்கில் வரும் 28-ம் தேதி சூப்பர் சிக்ஸ் போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணிக்கு அப்துல்ரசாக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வாட்சனுக்கு கண்டிஷன்!
சாம்பியன்லீக் 20-20ல் நியூசவுத்வேல்ஸ் அணியில் ஆஸி. வீரர் வாட்சன் இடம்பெற்றுள்ளார். சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இன்று களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வாட்சனை பேட்ஸ்மேனாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பந்துவீச்சில் பயன்படுத்தக்கூடாது என ஆஸி. வாரியம் நியூசவுத்வேல்ஸ் அணிக்கு திடீர் உத்தரவு போட்டுள்ளது. காயங்களில் இருந்து தப்பிக்கவே இந்த தந்திரமாம்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook