பெல் நிறுவனத்தில் 800 இன்ஜினியர் பணி!
பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 800 இன்ஜினியர் இடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்தமுள்ள 800 இடங் களில் மெக்கானிக்கல் பிரிவுக்கு 550 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு 175 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கு 75 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. வயது: இளநிலை பிரிவுக்கு 27 வயதிற்கு மிகாமலும், முதுநிலை பிரிவுக்கு 29 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லதுஎம்இ பட்டம். விண்ணப்பதாரர் கள் முதலில் கேட்-2012 தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். தேர்ச்சி பெறுபவர்கள், பெல் நிறுவன இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.தகுதி அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம் உள் ளிட்ட தகவல்களை பெற http://careers.bhel.in/bhel/isp/index.jsp என்ற இணையதளத்தை பார்க்கவும். கேட்-2012 பற்றிய தகவல்களைப் பெற http://careers.bhel.in என்ற இணையதளம் அல்லது எம்ப்ளாய்மென்ட் நியூஸ் செப்.24-30 இதழை பார்க்கவும்.
கேட்-2012 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2011. பெல் நிறுவனத்தின் இணையதளத்தில் விண்ணப் பிக்க கடைசி தேதி: 28.1.2012.