தொழில்போட்டி மிகுந்த உலகில் வேலைவாய்ப்புக்கு என்றுமே குறைவில்லாத துறையாக மார்க்கெட்டிங் விளங்குகிறது. எந்தவொரு பொருளையும் சந்தைப்படுத்துதலும், விற்பனையை அதிகப்படுத்துதலுமே இத்துறையின் முதுகெலும்பாக விளங்குகிறது. மார்க்கெட்டிங் சம்பந்தமான இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமோ படிப்புகளை பல்வேறு கல்லூரிகளும், கல்வி நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. தற்போதுள்ள சூழ்நிலையில் கல்லூரி கல்வியை நிறைவு செய்த பலரும் மார்க்கெட்டிங் படிப்புகளை விரும்பி படிக்கின்றனர்.
இதில் ஒரு சிறப்பு பிரிவு படிப்பாக மார்க்கெட்டிங் ரிசர்ச் துறை உள்ளது. விற்பனைத்துறையில் ஏற்படும் சிக்கல்களை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வுகளை ஆராய்வதே மார்க்கெட்டிங் ரிசர்ச் படிப்பின் முக்கிய நோக்கம். வாங்கும் சக்தி படைத்த இலக்கு வாடிக்கையாளரை கண்டறிவது, நுகர்வோரின் தேவைகள் குறித்து ஆய்வு செய்வது, புதிய, மேம்படுத்தப்பட்ட பொருட்களுக்கான தேவையை ஆய்வு செய்வது, போட்டி தயாரிப்புகள் குறித்த தகவல்களை திரட்டுதல் பொருட்களின் விலை, லாபத்தை முடிவு செய்வது, சரியான தகவலை, சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான நபரிடம் கொண்டு சேர்ப்பது ஆகியவற்றுக்கு மார்கெட்டிங் ரிசர்ச் உதவுகிறது.
சிறிய, பெரிய, நடுத்தர நிறுவனங்களில் (தனியார் நிறுவனமோ, அரசு நிறுவனமோ) முக்கியமான தருணங்களில் முடிவெடுக்க இத்துறை சார்ந்த கல்வியறிவு மிகவும் உதவிகரமாக இருக்கும். விற்பனை தொடர்பான பிரச்னைகளை விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து முடிவெடுக்கவும் இப்படிப்பு உதவுகிறது. புனேயில் உள்ள சிம்பயாசிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், ஜாம்ஷெட்பூரில் உள்ள சேவியர் லேபர் ரிலேஷன் இன்ஸ்டிடியூட் போன்ற முன்னணி கல்வி நிறுவனங்கள் மார்க்கெட்டிங் ரிசர்ச்சில் குறுகிய கால படிப்புகளை வழங்குகின்றன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook