இந்திய நாடாளுமன்ற லோக்சபா செயலகத்தில் காலியாக உள்ள 73 இடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1.Parlimentary Reporter Grade II (English/Hindi). 7 இடங்கள். சம்பளம்: ரூ.15,600- 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400. தகுதி: ஏதேனும் ஒரு டிகிரியுடன் நிமிடத்துக்கு 160 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறன் 2.Parlimentary Interpreter GradeII: 9 இடங்கள் (ஓபிசி-5, எஸ்சி-3, எஸ்டி-1). சம்பளம்: ரூ.15,600-ரூ.39.100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400. தகுதி: ஆங்கிலம்/ இந்தி வழி கல்வியியல் பட்டப்படிப்புடன் இந்தி/ஆங்கிலத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 3.Hindi Assistant: 7 இடங்கள் (ஓபிசி-3, எஸ்சி-3, எஸ்டி-1). சம்பளம்: ரூ.9,300-ரூ.34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600. தகுதி: இளங்கலையில் ஆங்கிலம்/இந்தி பாடங்களில் பட்டம் பெற்று பின்னர் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். 4. ஜூனியர் லைப்ரரி அசிஸ்டென்ட்: 14 இடங்கள் (ஓபிசி- 7, எஸ்சி-4, எஸ்டி-3). தகுதி: நூலக அறிவியலில் பட்டப்படிப்பு. 5. செக்யூரிட்டி அசிஸ்டென்ட் கிரேடு-2: 17 இடங்கள் (ஒபிசி-13, எஸ்சி-2, எஸ்டி-2). தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. 6. ஜூனியர் புருப் ரீடர்: 3 இடங்கள் (ஓபிசி). தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்புடன் பிரின்டிங் டெக்னாலஜி யில் டிப்ளமோ அல்லது பிரின்டிங் பிரஸில் ஆங்கிலம்/இந்தி காப்பி ஹோல்டராக 5 வருட பணிஅனுபவம். 7. ஜூனியர் கிளார்க்: 15 (பொது-14, எஸ்டி-1). தகுதி: ஏதேனும் ஒரு டிகிரியுடன் ஆங்கிலம்/இந்தியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 8. வேர்ஹவுஸ்மென்: 1 (ஓபிசி): தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிரின்டிங் டெக்னாலஜியில் டிப்ளமோ தகுதியுடன் சம்பந்தப்பட்ட துறையில் 5 வருட பணி அனுபவம். வயது: ஓபிசியினருக்கு 30க்குள்ளும், எஸ்டி.,எஸ்சியினருக்கு 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு/டிரேடு டெஸ்ட்/நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.loksabha.nic.in இணையதளத்தை பார்க்கவும். விண்ணப் பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: The Joint Recruitment Cell, Room No. 521, Parliament House Annexe, New Delhi 110 001. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.3.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook