ஜீவன் இல்லாத கதை தோற்கும் இயக்குனர் கணிப்பு!
‘கொள்ளைக்காரன்’ பட இயக்குனர் தமிழ்ச்செல்வன் கூறியது: கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்கள் பகிரங்கமாக தெரிந்து விடுகிறது. அதற்கான தண்டனையும் வழங்கப்படுகிறது. ஆனால் சிலர் செய்யும் சின்ன தவறுகள் மற்றவர்களால் கவனிக்கப்படாமல், தண்டனைக்கு உட்படாமல் போய்விடுகிறது. அந்த சின்ன தவறுகளே எதிர்காலத்தில் வளர்ந்து பூதாகரமாகும்போது எதிர்கொள்வது கடினம்.
நடைமுறை வாழ்க்கையில் வெளியில் சொல்ல முடியாமல் இதை பலர் அனுபவிக்கின்றனர். இப்படியொரு பாதிப்பில் சிக்கும் வாலிபனின் கதைதான் படம். விதார்த், சஞ்சிதா ஷெட்டி ஜோடி. சீனு ராமசாமி, பாலாஜி ஆகிய இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றிய போது ஒவ்வொரு காட்சியிலும் யதார்த்த மக்களின் ஜீவன் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்துகொண்டேன். ஜீவன் இல்லாமல் வரும் படங் களை மக்கள் தவிர்த்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட படங்கள் தோற்கின்றன.