ஓட்டல் பிசினஸில் ஹீரோயின் பல்டி அடித்தார் ஹீரோ!
நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குது...
கோலிவுட், மல்லுவுட் ஆக்டருங்க ஓட்டல் பிசினஸ் தொடங்கறதுல ஆர்வம் காட்டுறாங்களாம்... காட்டுறாங்களாம்... அந்த பட்டியல்ல மூணுஷா ஹீரோயினும் சேரப்போறாராம்... ஐதராபாத்துல பெரிய ஓட்டல் கட்டியிருக்கார்ன்னு ஏற்கனவே வந்த ஒரு தகவலை மறுத்தவரு, சீக்கிரமே ஓட்டல் திறக்கப்போறதா, சக நட்புங்ககிட்ட சொல்றாராம்... அதுக்கான இடத்தை தேர்வு செய்யறதுல மும்முரமா இருக்காராம்... இருக்காராம்...
சித்தார்த்த ஆக்டரு தன்னைப்பத்தி விமர்சனம் பண்ணவங்களையும், அவங்க குடும்பத்தை பத்தியும் இணையதளத்துல தாறுமாறா திட்டி எழுதினாராம்... இதுக்கு எதிர்ப்பு கிளம்பியதோட, மன்னிப்பு கேட்கணும்ன்னும் சொன்னாங்களாம்... பிடிவாதமா மறுத்த நடிகரு திடீர்ன்னு அதே இணையதளத்துல மன்னிப்பு கேட்டிருக்காராம். ஏற்கனவே ரிலீஸ் ஆன படம் ஊத்திக்கிட்டதாலே அடுத்த படத்துக்கு பங்கம் வந்திடக் கூடாதுன்னு அந்தர்பல்டி அடிச்சிருக்கிறதா இன்டஸ்ட்ரியில பேசிக்கிறாங்களாம்... பேசிக்கிறாங்களாம்...
சொந்த வாழ்க்கை படத்துல நடிக்கலைன்னு சொல்லிட்டு அதுபோன்ற கதையிலதான், சோனி நடிகை நடிக்கிறாராம்... நடிக்கிறாராம்... அவரோட எக்ஸ் ஹஸ்பண்ட் மாதிரி ஒரு கேரக்டர் படத்துல வருதாம்... சுயநலத்தை பெரிசா நினைக்கற அந்த கேரக்டருக்காக கண்ணாடிபோட்டு ‘எக்ஸ்’ சாயல்ல இருக்கற ஆளை இயக்கம் தேடுறாராம்... கிடைச்சா அது மூலமா எக்ஸை அட்டாக் பண்ற மாதிரி சீன் வைக்கப் போறாங்களாம்... போறாங்களாம்...