மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன் சிலின் கீழ் செயல்படும் சென்னையில் உள்ள தோல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. 1. பிரின்ஸ்பல் டெக்னிக்கல் ஆபீசர்: 1 இடம். சம்பளம்: ரூ.37,400- 67000. வயது: 45க்குள். தகுதி: கெமிஸ்ட்ரி/அனலிடிக்கல் கெமிஸ்ட்ரி பாடத்தில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களு டன் பட்டம். அனலிடிக்கல் கெமிஸ்ட்ரி துறையில் 15 வருட பணிஅனுபவம். 2. மெடிக்கல் ஆபீசர்: 2 இடங்கள் (பொது-1, ஓபிசி-1). சம்பளம்: ரூ.15,600-39,100. வயது: 35க்குள். தகுதி: எம்பிபிஎஸ் படிப்புடன் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனையில் 6 வருட பணிஅனுபவம். 3. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 3 இடங்கள் (பொது-2, எஸ்டி-1). சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800. வயது: 28க்குள். தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் லெதர் டெக்னாலஜி பாடத்தில் 3 வருட டிப்ளமோவில் முதல் வகுப்பில் தேர்ச்சி அல்லது பிளஸ் 2வில் அறிவியல் பாடத் தில் தேர்ச்சியுடன் மெக் கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் முதல் வகுப்பு டிப்ளமோ அல்லது பிஎஸ்சி பிசிக்ஸ் படிப்பு டன் பயோபிசிக்ஸ் பாடப்பிரிவில் ஒரு வருட தொழிற் படிப்பு அல்லது பிளஸ் 2 வில் அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சியுடன் இன்ஸ்ட்ருமென் டேஷன் இன்ஜினியரிங் டிப்ளமோ. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. விண்ணப்ப கட்டணம்: ரூ.100இதை Director, Central Leather Research Institute என்ற பெயரில் சென்னையில் மாற்றத் தக்க வகையில் ஏதேனும் ஒரு எஸ்பிஐ வங்கியில் டி.டி. எடுத்து அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.clri.nic.in. இணையதளத்தை பார்க்கவும். பிரின்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய முகவரி: The Controller Of Administration, Central Leather Research Institute, Sardar Patel Road, Adyar, Chennai 600020. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.29. பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: செப்.30.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook