வங்கி கிளார்க் பணிக்கு பொது எழுத்து தேர்வு
இந்திய வங்கிகள் சங்கத்தில் உறுப்பினர்களாக அலகாபாத் பேங்க், ஆந்திரா பேங்க், பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 19 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் காலியாக உள்ள கிளரிக்கல் கேடர் பிரிவில் பணிபுரிய பொது எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது.
வயது: 1.8.2011ன்படி 18 முதல் 28 வயதிற்குள். அரசு விதிகளின்படி வயதுத்தளர்வு உண்டு. கல்வித்தகுதி: 10ம் வகுப்பில் 60 சதவீத தேர்ச்சி அல்லது பிளஸ் 2 சிஸ்டத்தில் பிளஸ் 1ல் 50 சதவீத தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பட்டம்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.350ஐ இணையதள முகவரியில் கொடுக்கப் பட்ட முறைப்படி செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினர் ரூ.50 செலுத்தினால் போதும். ஆன்லை னில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு http://www.ibps.in/html/common.htm என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள்: செப்.29.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.24.