கவிஞர் முத்துவிஜயன் காலமானார்: மஞ்சள் காமாலை நோயால் பாதிப்பு
சென்னை: ‘மேகமாய் வந்துபோகிறேன்..’ உள்ளிட்ட பல்வேறு ஹிட் பாடல்கள் எழுதிய சினிமா பாடலாசிரியர் முத்துவிஜயன் காலமானார். விஜய் நடிக்க இயக்குனர் எழில் இயக்கத்தில் உருவான துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இடம் பெற்ற மேகமாய் வந்து போகிறேன் பாடல் மூலம் பிரபலமானவர் கவிஞர் முத்துவிஜயன் (48). பிரபு தேவா நடித்த, பெண்ணின் மனதைத் தொட்டு படத்தில், கண்ணுக்குள் ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா உட்பட 800 பாடல்கள் எழுதியுள்ளார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த முத்து விஜயன் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை முத்துவிஜயன் திடீரென்று காலமானார். அவரது உடலுக்கு பாடலா சிரியர்கள் சங்க தலைவர் தமிழமுதன், சீர்காழி சிற்பி, இயக்குநர்கள் பாலி சீரங்கம், குகை மா.புக ழேந்தி, கீரா, முகிலன், இசை கலைவாணன் உள்ளிட்ட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். வளசரவாக்கம் சுடுகாட்டில் முத்துவிஜயன் உடல் தகனம் நடந்தது.முத்துவிஜயன் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சேர்ந்தவர் ஆவார்.