ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராசாவை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி!
புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த சிபிஐ க்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 3 பேரை நேற்று சிபிஐ கைது செய்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்-குப் பதிவு செய்துள்ளது. ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிபிஐ க்கு உச்சநீதிமன்றம் அனுமதி
சிபிஐ கோரிக்கையை ஏற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ராசாவை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய அதிகாரிகளான பெகுரா மற்றும் சந்தாலியாவையும் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக, டெல்லியில் பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் ராசா உட்பட 3 பேரும் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர். ஆ.ராசாவிடம் 5 நாள் விசாரணை நடத்த சிபிஐ கோரிக்கை வைத்தது. சிபிஐ 5 நாள் விசாரணை செய்ய அனுமதி தருவதற்கு ராசாவின் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் ராசாவை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அவரது வக்கீல் வாதம் செய்தார். இதனையடுத்து இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி சினி 30 நிமிடத்திற்குள் தீர்ப்பு கூறுவதாக அறிவித்திருந்தார்.