வடிவேலு - சிங்கமுத்து சமாதானம் : நடிகர் போண்டா மணி
பண்ருட்டி: நடிகர் வடிவேலுக்கும் சிங்கமுத்துவுக்கும் ஏற்பட்ட பிரச்னை விரைவில் சுமுகமாக முடியும். இருவரும் விரைவில் இணைவார்கள் என்று காமெடி நடிகர் போண்டா மணி கூறினார். பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த நகைச்சுவை நடிகர்கள் போண்டா மணி, பெஞ்சமின் ஆகியோர் பண்ருட்டியில் பேட்டி அளித்தனர்.
போண்டாமணி கூறியதாவது: எனது சொந்த ஊர் இலங்கை. அங்கு பெரும் பணக்காரனாக இருந்தவன் அகதியாக ராமேஸ்வரத்துக்கு வந்தேன். சினிமாவில் நான் உயர காரணம் நடிகர் வடிவேலு. அவருக்கும் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்துவுக்கும் எதிர்பாராவிதமாக பிரச்னை ஏற்பட்டுவிட்டது.
அவர்களது பிரச்னை விரைவில் சுமுகமாக முடிந்து விரைவில் ஒன்றாக இணைவார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ராணா’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. அதற்காக காத்திருக்கிறேன். மீண்டும் இலங்கை செல்ல ஆசையாக உள்ளது.