Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2017
28
Mar
திலீப்பை மறுமணம் செய்தவர் நடிப்பை கைவிட்டு பாடகியாகிறார் காவ்யா


காசி, என் மன வானில், சாது மிரண்டா படங்களில் காவ்யா நடித்திருந்தார். ராஜ்யம் படத்தில் நடித்திருந்தார் திலீப். மல்லுவுட் நடிகர்களான இவர்களில் நடிகை மஞ்சுவாரியரை திலீப் மணந்தார். சில வருடங்களில் இவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதுபோல் நிஷால் சந்திரா என்பவரை மணந்தார் காவ்யா. அவரும் இரண்டே வருடத்தில் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். திலீப், காவ்யா மாதவன் காதலிப்பதாகவும் இவர்கள் மறுமணம் செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. அதை இருவருமே மறுத்துவந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு திடீரென்று இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகு காவ்யா நடிக்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் மீண்டும் திரை துறைக்கு திரும்ப முடிவு செய்திருக்கிறார். நடிகையாக இல்லாமல் பாடகியாக அவர் பணியை தொடரவிருக்கிறார். உன்னி பிரணவம் இயக்கும் ஹடியா படத்தில் சரத் இசையில் அவர் பாடல் பாட உள்ளார். ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு மேட்னி மலையாள படத்தில் பாடல் பாடியிருக்கிறார் காவ்யா.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement