Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2017
28
Mar
வரலட்சுமியை மலையாளத்துக்கு அழைக்கும் இயக்குனர்


போடா போடி படத்தில் டான்ஸராக அறிமுகமான வரலட்சுமி தாரை தப்பட்டை படத்திலும் கரகாட்டக்காரியாக தனது ஆட்டத்தை தொடர்ந்தார். இவர் நடித்திருக்கும் மத கஜ ராஜா ரிலீஸ் ஆகாமல் தடைப்பட்டிருக்கிறது. தவிர நிருபன், அம்மாயி, சத்யா, விக்ரம், வேதா படங்களில் நடித்துவருகிறார். இதற்கிடையில் மம்மூட்டியுடன் கஸபா படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்க உள்ளார். தமிழில் சமுத்திரக்கனி இயக்கிய ‘அப்பா’ மலையாளத்தில் ஆகாச மிட்டாய் பெயரில் இயக்குகிறார். தமிழில் சமுத்திரக்கனி ஏற்ற வேடத்தை மலையாளத்தில் ஜெயராம் ஏற்கிறார். அவரது ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். இதுபற்றி வரலட்சுமி கூறும் போது, ’குடும்ப பாங்கான படம். ஜெயராம் ஜோடியாக நடிக்கிறேன். அவரது ரசிகை நான். இயக்குனர் சமுத்திரக்கனி என்னிடம் மலையாள ரீமேக்கில் நடிக்கிறாயா என்று கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டேன். அவரது இயக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்றார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement