Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2017
23
Feb
2 நாயகிகளை ஓவர் டேக் செய்து பிரகாஷுடன் ஜோடிசேரும் மகிமா


இளம் ஹீரோயின்கள் வருகை அதிகரித்துள்ளதால் போட்டியும் அதிகரித்திருக்கிறது. அதர்வா நடித்த ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு அடுத்து இயக்கும் படம் ‘ஐங்கரன்’. பி.கணேஷ் தயாரிக்கிறார். முதலில் இப்படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க எண்ணி அவரிடம் கதை சொன்னார் இயக்குனர். ஆனால் அவரது கால்ஷீட் தற்போதைக்கு இல்லை என்று தெரிந்ததும் ஜி.வி.பிரகாஷ்குமாரை அணுகினார். வழக்கமான படங்களிலிருந்து வித்தியாசமான கதை அம்சமாக இருப்பதை உணர்ந்த பிரகாஷ் நடிக்க ஒப்புக்கொண்டார். இரண்டு ஹீரோக்களிடம் கைமாறிய இப்பட வாய்ப்பு ஹீரோயின்களை பொறுத்தவரை மும்முனை போட்டியாக அமைந்தது. மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரி என 2 பேர்களிடம் முதலில் பேச்சு நடந்தது. திடீரென்று மூன்றாவதாக மகிமா நம்பியாரும் போட்டியில் குதித்தார். ஏற்கனவே சாட்டை, குற்றம் 23 படங்களில் நடித்திருக்கும் இவருக்கு லக் ஒர்க் அவுட் ஆனது. அவரே பிரகாஷ் ஜோடியாக ஒப்பந்தம் ஆனார். தற்போது படப் பிடிப்பு தொடங்கி அடுத்தக்கட்ட படப்பிடிப்புகளும் தொடர்கின்றன. ஜூனில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement