பலாத்கார முயற்சி சவுதி ஆசாமி தலை துண்டிப்பு
ரியாத்: சவுதி அரேபியாவின் தபுக் பகுதியை சேர்ந்த அதெல் பின் முகமது என்பவர், தனது பக்கத்து வீட்டு நபரின் வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவியை தாக்கியுள்ளார். பின் அவரை நிர்வாணமாக படம் பிடித்தார். அவரை பலாத்காரம் செய்யவும் அதெல் பின் முகமது முயன்றுள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்து நடந்த விசாரணையில் அதெல் முகமதுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தபுக் நகரில் அவரது தலை நேற்று துண்டிக்கப்பட்டது. இத்துடன் சேர்த்து சவுதி அரேபியாவில் இந்தாண்டு தலை துண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மே மாதம் மட்டும் 15 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சவுதி அரேபியாவில் பின்பற்றப்படும் சட்ட விதிகளின்படி பலாத்காரம், கொலை, கொள்ளை, போதை கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இதை நிறுத்த வேண்டும் என லண்டனை சேர்ந்த அம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு வேண்டுகோள் விடுத்துவருகிறது.