Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2016
12
Nov
அரவக்குறிச்சி அருகே வாகன சோதனையில் ரூ34.75 லட்சம் பறிமுதல்


அரவக்குறிச்சி, -அரவக்குறிச்சி அருகே சோதனை சாவடியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டு, உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ரூ.34.75 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலையொட்டி பண நடமாட்டத்தை தடுக்கஒத்தமாந்துறை என்ற இடத்தில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் தாராபுரத்திலிருந்து திருச்சி நோக்கி சென்ற ஆம்னி வேனை நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் ரமேஷ் மற்றும் குழுவினர் சோதனையிட்டனர்.அப்போது வேனில் வந்த தாராபுரத்தை சேர்நத பல்ராம் என்ற தானிய வியாபாரியின் ஊழியர் ரமேஷ்(26) என்பவரிடமிருந்து 34.75 லட்சத்தை கைப்பற்றினர். அதற்குரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் பணத்தை அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சைபுதீனிடம் ஒப்படைத்தனர்.

அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், காரில் வந்த ரமேஷ், தாராபுரத்தை சேர்ந்த பல்ராம் என்ற தானிய வியாபாரியின் ஊழியர் என்பதும், தானியம் வாங்கிய தொகையை கொடுப்பதற்காக திருச்சி வந்ததாகவும் கூறினார். ஆனாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் கைப்பற்றப்பட்ட பணம் ரூ.34.75 லட்சம் அரவக்குறிச்சி அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement