கமலுக்கு இளையராஜா கொடுத்த டைட்டில்
முதன்முறையாக கமலுடன் இணைந்து ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகிறது. இப்படத்திற்கு டைட்டில் வைக்கும்பணியில் இருந்தார் கமல். படத்துக்கு இசை அமைப்பதுபற்றி இளையராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு டைட்டில் சொல்ல அது கமலுக்கு பிடித்தது. அதையே தலைப்பாக்கிவிட்டார். புதுமை விரும்பி கமல்ஹாசன் முதன்முறையாக தனது பட தொடக்க விழாவை ஆன் லைனில் லைவ்வாக காட்ட முடிவு செய்திருக்கிறார். நாளை மறுதினம் 29ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பட தொடக்க விழா நடக்கிறது. இதுபற்றி குறிப்பிட்டிருக்கும் கமல், ‘ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் 3 மொழிப்படம் உலகநாயகன் டியூப்பில் காட்டப்படுகிறது’ என்றார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.