ரஜினி படத்தில் அமிதாப் கெஸ்ட்ரோல்?
ரஜினி நடிக்கும் 2.0 படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. ஷங்கர் இயக்குகிறார். அக்ஷய்குமாரும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். இதையறிந்து டெல்லி சென்ற அமிதாப், அபிஷேக் பச்சன் இருவரும் நேராக படப்பிடிப்பு தளத்துக்கு சென்றனர். ரஜினி, ஷங்கரை சந்தித்து பேசியதுடன் பட வெற்றிக்கு வாழ்த்து கூறினர். பிறகு அக்ஷய் குமாரை சந்தித்து அவருடன் அபிஷேக் பச்சன் பேசிக்கொண்டிருந்தார். ‘2.0 படத்தில் அமிதாப், அபிஷேக் பச்சன் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்களா?’ என்று கேட்ட போது,’அப்படி எந்த திட்டமும் இல்லை. தற்போது டெல்லி ஸ்டேடியத்தில் நடக்கும் படப்பிடிப்பு 12 நாட்கள் நடக்கிறது. அதன்பிறகு படக் குழு மொராக்கோ செல்கிறது’ என்று பட தரப்பில் தெரிவிக்கப்பட்டது.