நகை டிசைனிங், உடற்பயிற்சி கூடம், கட்டுமானம், அழகு நிலையம் என வெவ்வேறு தொழில்களில் முறையே நடிகைகள் தமன்னா, ரகுல் ப்ரீத் சிங், நமீதா, ஸ்ரேயா போன்றவர்கள் தங்கள் முதலீடுகளை செய்துள்ளனர். நடிகர் ஆர்யா ரெஸ்டாரென்ட் நடத்துகிறார். இவர்களிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ். அடிப்படையில் விவசாய குடும்பத்தை சேர்ந்த இவருக்கு மைசூர் அருகே சொந்தமாக நிலம் உள்ளது. அதில் இயற்கை சாகுபடி முறையில் காய் கறிகள் வளர்க்கிறார்.சமீபத்தில் தெலங்கானா பகுதியில் கொண்டாரெட்டிபள்ளி என்ற கிராமத்தை பிரகாஷ்ராஜ் தத்தெடுத்தார். அங்குள்ள விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம்பற்றி பயிற்சி அளித்ததுடன் உதவிகளும் வழங்கினார். அங்குள்ள நிலங்களில் விளையும் காய்கறிகளை விற்பதற்காக தற்போது நடமாடும் கடைகள் திறந்திருக்கிறார். சித்ராபுரி காலனி, மணிகொண்டா, ஐதராபாத் பகுதியில் இதன் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி கடை திறப்பு விழாவில் டோலிவுட் நட்சத்திரங்களுடன் அப்பகுதி மக்களும் பங்கேற்றனர்.