சிரஞ்சீவி திடீர் டான்ஸ் பயிற்சி
தமிழில் விஜய் நடித்த ‘கத்தி’ தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார் சிரஞ்சீவி. வி.வி.விநாயக் இயக்குகிறார். தனது 150வது படமாக உருவாவதால் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் சிரஞ்சீவி. ஏற்கனவே உடல் இளைத்து ஸ்லிம் தோற்றத்துக்கு மாறினார். தோள்பட்டையில் தொடர்ச்சியான வலி இருந்ததால் படப்பிடிப்பு நேரத்தில் இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதுபோதாது என்று ‘ஸும்பா’ பயிற்சி பெற முடிவு செய்திருக்கிறார் சிரஞ்சீவி.
நீச்சல், ஓட்டம், மூச்சுப் பயிற்சி உள்ளடக்கிய உடற்பயிற்சியான இத்துடன் நடனத்தையும் இணைத்திருக்கிறார்.
சிரஞ்சீவியிடம் ஆக்ஷன் காட்சிகள் எதிர்பார்க்கும் அளவுக்கு நடன அசைவுகளையும் ரசிகர்கள் எதிர்பார்ப்பதுண்டு. நீண்ட இடைெவளிக்கு பிறகு நடிப்பதால் பழைய நடன அசைவுகளை பயன்படுத்தாமல் புதுவித நடன யுக்தி கையாள திட்டமிட்டார். அதற்காகவே ஸும்பா பயிற்சியில் ஈடுபடுகிறார். இதற்காக தனி குழு அமைக்கப்பட்டிருக்கிறது. நடன அசைவுகளில் புதுவித அசைவுகளை வடிவமைக்கும்படி அவர்களிடம் சிரஞ்சீவி கேட்டுக்கொண்டிருக்கிறார்.