விக்ரம் பிரபுடன் ஜோடி சேர்கிறார் ஷாம்லி
விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்துக்கு ‘வீர சிவாஜி’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதுபற்றி இயக்குனர் கணேஷ் வினாயக் கூறியது:
ஹீரோவுக்கும், குழந்தைக்கும் இடையே நடக்கும் பாசப் பிணைப்பை மையமாக வைத்து காதல், ஆக்ஷன், காமெடி கலந்த ஜனரஞ்சக கதை. விக்ரம் பிரபு ஹீரோ. ஷாம்லி ஹீரோயின். ஜான் விஜய், ரோபோ சங்கர், பாபு, ராஜேந்திரன், மனிஷா, வினோதினி, ரஞ்சனி, மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவு. டி.இமான் இசை. ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ரோமியா ஜூலியட் படத்ைத தயாரித்த எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். புதுச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் இதன் 2ம் கட்ட படப்பிடிப்பு நடக்கிறது.இவ்வாறு இயக்குனர் கூறினார். நடிகை ஷாலினியின் தங்கை ஷாம்லி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக மட்டுமே நடித்த இவர் தற்போது ஹீரோயினாக நடிக்கிறார்.