உலகளாவிய அளவில் மீடியா துறை கொடிகட்டி பறக்கிறது. வேலைவாய்ப்புகளும் இத்துறையில் கொட்டிக்கிடக்கின்றன. குறிப்பாக தகவல் தொடர்பு, எலக்ட்ரானிக் மீடியா துறைகளில் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஊதிய மும் சாப்ட்வேர் துறைக்கு இணையாக அளிக்கப்படுகிறது.
இருந்தபோதிலும் மீடியா சார்ந்த படிப்பறிவுடன் இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைவாகவே உள்ளனர்.
இதுபோன்றவர்களுக்கு கல்வித்தகுதியை அளிக்கும் வகையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பல் வேறு மீடியா படிப்புகள் வழங்கப்படுகின்றன. பத்திரிகை துறையில் வேலைவாய்ப்பை அளிக்கும் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் முதுகலை பட்டம், டிப்ளமோ படிப்புகள் தவிர காமராஜர் பல்கலைக்கழகத் தின் தகவல் தொடர்பு பாடத் துறை எம்எஸ்சி இ&மீடியா கம்யூனிகேஷன் என்ற 2 ஆண்டு கால முதுகலை படிப்பை கடந்த 2006ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.
எல்சிடி புரொஜக்டர், மல்டிமீடியா லேப், வீடியோ மற்றும் டிஜிட்டல் கேமரா, ஆடியோ சிஸ்டம் குறித்த சிறப்பு பயிற்சிகளுடன் இப்பாடப்பிரிவு நடத்தப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்கு இத்துறைக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய நூலக வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீடியா துறை, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், கிராபிக்ஸ் அண்ட் அனிமேஷன், சினிமா துறை, சவுண்ட் இன்ஜினியரிங், வெப் டிசைனிங், இ&கன்டென்ட் அண்ட் சினிமாட்டோகிராபி துறைகளில் பணிபுரிபவர்களுக்கு எம்எஸ்சி இ-மீடியா கம்யூனிகேஷன் படிப்பு மிகுந்த பயனளிக்கும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் எம்எஸ்சி இ&மீடியா கம்யூனிகேஷன் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வு எதுவும் கிடையாது.
இப்படிப்பு தவிர கம்யூனிகேஷன் துறை மூலம் எம்பில் கம்யூனிகேஷன் ஸ்டடீஸ் என்ற ஆராய்ச்சி படிப்பும் நடத்தப்படுகிறது. எம்ஏ இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல், மீடியா கம்யூனிகேஷன் அண்ட் மேனேஜ்மென்ட், எம்எஸ்சி இ-மீடியா கம்யூனிகேஷன்ஸ், எம்எஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன், எம்எஸ்சி எலக்ட்ரானிக் மீடியா, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை டிப்ளமோ மற்றும் முதுகலை பிலிம் டெக்னாலஜி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
இப்படிப்பை முடித்தவர்கள் மாஸ் மீடியா நிறுவனங்கள், நெட்வொர்க் ஏஜென்சிகள், சாப்ட்வேர் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களில் பணிவாய்ப்பை பெறலாம். மாணவர் சேர்க்கை, விண்ணப்ப கட்டணம், கல்விக்கட்டணம் உள்ளிட்ட பிற விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook