Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2015
24
Mar
மியாமி ஓபன் டென்னிஸ் ஜோகோவிச், செரீனா பங்கேற்பு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கீபிஸ்கேன்: மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடும் வீரர்களில் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகியோருக்கு தர வரிசையில் முதல் நிலை வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் கீபிஸ்கேன் நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி கள் நாளை துவங்குகிறது. இந்தப்போட்டியில் ஆடவர், மகளிர் பிரிவுகளில் பிரபல வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர். ஆடவர் பிரிவில் மியாமி ஓபன் பட்ட த்தை நான்கு முறை வென்றவரான நோவாக் ஜோகோ விச், ரபேல் நடால், கீய் நிஷிகோரி, ஆண்டி முர்ரே, ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்தியன்வெல்ஸ் நகரில் நடந்த பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சிடம் நேற்று தோல்வி கண்ட ரோஜர் பெடரர், சில நாட்கள் ஓய்வெடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதனால் அவர் மியாமி ஓபன் டென்டிஸ் போட்டியில் பங்கேற்கவில்லை. ஆடவர் பிரிவில் நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச்சுக்கு தர வரிசையில முதலிடமும், நடாலுக்கு 2ம் இடமும், ஆண்டி முர்ரேவுக்கு மூன்றாமிடமும், நிஷிகோரிக்கு 4ம் இடமும் வழங்கப்பட்டுள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதியில் நடால்-முர்ரே மோதும் வகையில் போட்டி அட்ட வணை தயாரிக்கப்பட்டுள்ளது.

மகளிர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா, சிமோனா ஹாலேப், கரோலின் ஓஸ்னியாக்கி உள்ளிட்ட வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்சுக்கு முதலிடமும், மரியா ஷரபோவாவுக்கு 2ம் இடமும், சிமோனா ஹாலேப்புக்கு 3ம் இடமும், கரோலின் ஓஸ்னியாக்கிக்கு 4ம் இடமும் வழங்கப்பட்டுள்ளது. அரையிறுதிவரை இவர்கள் எளிதில் முன்னேறும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. துவக்க சுற்றுகளில் இவர்கள் தோல்வியடையாமலிருந்தால், செரீனா வில்லியம்ஸ்-சிமோனா ஹாலேப், ஷரபோவா-ஓஸ்னியாக்கி ஆகியோர் அரையிறுதியில் மோதுவார்கள்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement