மத்திய அரசின் மகா ரத்னா நிறுவனங்களில் ஒன்றான கெயில் இந்தியா நிறுவனத்தில் மருத்துவம், நிதி, மற்றும் அக்கவுன்ட்ஸ், பாதுகாப்பு ஆகிய துறைகளில் காலியாக உள்ள 16 இடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்கள்:
1. துணை மேலாளர் (மருத்துவ சேவைகள் - சிறப்பு மருத்துவம்) (நிலை - 3):
3 இடங்கள். (பொது - 1, எஸ்சி - 1, ஒபிசி - 1)
சம்பளம்:
ரூ.29,100 - 54,500. தகுதி:
எம்பிபிஎஸ் உடன், மருந்தியலில் எம்.டி., படிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.
வயது:
16.3.2025 தேதிப்படி 36க்குள்.
2. துணை மேலாளர் (மருத்துவ சேவைகள் - மகப்பேறு இயல் சிறப்பு மருத்துவம்) (நிலை - 3)
1 இடம். (பொது). சம்பளம்:
ரூ.29,100 - 54,500. தகுதி:
எம்பிபிஎஸ் உடன் மகப்பேறு இயலில் முதுநிலை பட்டம் அல்லது எம்பிபிஎஸ்சுடன் மகப்பேறு இயலில் முதுநிலை டிப்ளமோ. வயது:
16.3.2025 தேதிப்படி 36க்குள். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். 3. துணை மேலாளர்: (நிலை - 2).
சிஏ/ ஐசிடபிள்யூஏ அல்லது குறைந்த பட்சம் 60 சதவீத தேர்ச்சியுடன் பி.காம் தேர்ச்சி மற்றும் 65 சதவீத தேர்ச்சியுடன் நிதி பாடத்தில் எம்பிஏ அல்லது பொருளியல் பாடத்தில் 60 சதவீத தேர்ச்சியுடன் பி.ஏ., மற்றும் 65 சதவீத தேர்ச்சியுடன் நிதி பாடத்தில் எம்பிஏ பட்டம் அல்லது கணிதம் பாடத்தில் 60 சதவீத தேர்ச்சியுடன் பி.ஏ.,/ பிஎஸ்சி மற்றும் 65 சதவீத தேர்சசியுடன் நிதி பாடத்தில் எம்பிஏ அல்லது புள்ளியியல் பாடத்தில் பி.ஏ/ பிஎஸ்சி., மற்றும் 65 சதவீத தேர்ச்சியுடன் நிதி பாடத்தில் எம்பிஏ பட்டம் அல்லது 60 சதவீத தேர்ச்சியுடன் பி.இ.,/ பி.டெக் பட்டம். வயது:
16.3.2025 தேதிப்படி 30க்குள்.
4. செக்யூரிட்டி ஆபீசர்: (நிலை - 1):
3 இடங்கள். (ஒபிசி):
சம்பளம்:
ரூ.20,600 - 46,500.
தகுதி:
60 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் தொழில் பாதுகாப்பு பாடத்தில் டிப்ளமோவுடன் மத்திய போலீஸ் அமைப்புகளான சிஐஎஸ்எப், சிஆர்பிஎப், பிஎஸ்எப், ஐடிபிபி ஆகியவற்றில் 3 ஆண்டு முன் அனுபவம்.
வயது:
16.3.2025 தேதிப்படி 48க்குள்.
குழு விவாதம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.200. பொது மற்றும் ஒபிசியினர் GAIL (INDIA) LIMITED என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டியினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.