மருத்துவப் படிப்பு
முடித்தவர்கள் இந்திய ராணுவத்தில் மருத்துவ அலுவலராக சேரலாம்.
பயிற்சிக்குப் பிறகு வேலையில் சேர்வதற்கான விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. 400 காலிப் பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதிகள்:
இளநிலை
மருத்துவப் படிப்பில், முதல் அல்லது இரண்டாவது முயற்சியில் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். அதன்பின் மருத்துவராக ஓராண்டு பயிற்சியை
முடித்திருக்க வேண்டும்.
இந்தியாவின் ஏதாவது ஒரு மாநில மருத்துவ
கவுன்சிலில், மருத்துவராக நிரந்தரப் பதிவு செய்திருக்க வேண்டும். முதுநிலை
மருத்துவப் பட்டப் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கத்
தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள், ராணுவ மருத்துவக் குழுவின் மூலம்
நடத்தப்படும் உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியதும் அவசியம்.
விண்ணப்பதாரர்கள் 2015ம் ஆண்டு டிசம்பர் 31 தேதியின்போது 45 வயதிற்கு
உட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
ஆன்லைன்
மற்றும் ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமான 200
ரூபாயை, இன்டர்நெட் பேங்கிங், கிரடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக
செலுத்த வேண்டும். பூர்த்தி செய்து சமர்ப்பித்த விண்ணப்பத்தினை நகல்
எடுத்து, கெஸடட் அதிகாரி கையொப்பத்துடன், தேவையான சான்று நகல்களுடன்,
கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி:
Director General, Armed Forces Medical Services / DG1A, Ministery of Defence, ‘M’ Block, New Delhi 110 001.