Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2015
16
Mar
மலேசியாவில்2 விமானங்கள் நேருக்குநேர் மோதல்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கோலாலம்பூர்: மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே லங்காவி தீவில் சர்வதேச கடல் மற்றும் விமான கண்காட்சி நாளை முதல் வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் இந்தோனேஷியா உட்பட பல்வேறு நாட்டு விமானங்களும் கப்பல்களும் கலந்து கொள்கின்றன.இதற்காக பல்வேறு நாடுகளின் கப்பல்களும் விமானங்களும் லங்காவி தீவுக்கு வந்துள்ளன. இந்தோனேஷியாவை சேர்ந்த 2 அதிநவீன விமானங்கள் நேற்று மாலை நடுவானில் சாகசத்தில் ஈடுபட்டன. அப்போது ஒரு விமானத்தின் இறக்கையில் மற்றொரு விமானம் மோதியதால், இரண்டு விமானங்களும் நடுவானில் வெடித்து சிதறின. இந்த 2 விமானங்களின் 4 விமானிகளும் பாராசூட் மூலம் உயிர் தப்பினார்கள்.

அந்த 2 விமானங்களில் இருந்து வெடித்து சிதறிய பாகங்கள் அருகில் இருந்த வீடுகளின் மீதும் கார்களின் மீதும் எரிந்தபடி விழுந்ததால், அவை தீப்பற்றி எரியத் தொடங்கின. இதுகுறித்து தகவல் லங்காவி போலீசாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.பாராசூட்டில் மூலம் தரையில் குதித்து படுகாயம் அடைந்த 4 விமானிகளும் பின்னர் லங்காவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ஹிஸ்சாமுதீன் ஹுசைன் நேற்றிரவு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.இந்தோனேஷியாவின் 2 விமானங்கள் விபத்துக்கு உள்ளானது எங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. இருந்தாலும், விமான கண்காட்சியில் எங்களது நவீனரக விமானங்களின் பங்களிப்பு நிச்சயம் இடம்பெறும் என்று விமான நிறுவன வட்டாரம் கூறுகிறது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement