வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கும் கல்வி வேண்டும்: நல்லகண்ணு வலியுறுத்தல்
மதுரை: ' வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாக கல்வி இருக்கவேண்டும்' என்று மதுரை வேலம்மாள் தொழில்நுட்பக் கல்லூரியில் காமராஜர் கலையரங்கத்தை திறந்து வைத்து, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஆர்.நல்லகண்ணு பேசினார்.மதுரை வேலம்மாள் தொழில்நுட்ப கல்லூரியில் காமராஜர் கலையரங்க திறப்பு விழா நடந்தது. வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். கலையரங்கை திறந்து வைத்து இந்திய கம்யூனிஸ்ட் தேசிய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஆர்.நல்லகண்ணு பேசுகையில், ' காமராஜர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவரது காலத்தில் தமிழகத்தில் அதிக கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டன. நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சேர்க்கும் வலிமை கல்விக்குத்தான் இருக்கிறது. கல்வியுடன் தொழில் துறைக்கும், வேலை வாய்ப்பிற்கும் காமராஜர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அவரது காலத்தில் தமிழகத்தில் ஏராளமான அணைகள் கட்டப்பட்டன. வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாக கல்வி இருக்கவேண்டும். இன்றைக்கு 95 லட்சம் இளைஞர்கள் வேலைக்கு பதிவு செய்து காத்திருக்கின்றனர்.இவ்வாறு நல்லகண்ணு பேசினார்.