Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2015
03
Mar
கல்வியில் மேன்மை தரும் ஹயக்ரீவர் வழிபாடு தேர்வுக்கு முன் வழிபடும் மாணவர்கள்


மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ஹயக்ரீவர் தசாவதாரங்களுக்கு முன்பே மனித உடலுடனும் குதிரை முகத்துடனும் தோன்றியவர். அதனால் பரிமுகன் என அழைக்கப்படுகிறார். ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் பவுர்ணமி திதியில் அழகான நீண்ட தீர்க்கமான நாசியுடன் (மூக்கு), இரண்டு பெரிய மிளிரும் காதுகளுடன், குதிரை முகத்துடன் சூரிய ஒளிக்கதிர்கள் பிடரி கேசங்களாக அமைய, பூமி நெற்றியாய் அமைய, கங்கை, சரஸ்வதி இரு புருவங்களாக அமைய, சந்திர, சூரியர்கள் தாமரைக்கண்களாக, சந்தியா தேவதைகள் நாசித்துவாரங்களாக, பித்ருதேவதைகள் பற்களாக, பிரம்ம லோகங்கள் இரண்டு உதடுகளாக, காளராத்ரி கழுத்தாக அமைய திவ்யதேஜஸ் உடன் அவதரித்தார். அனைத்து வித்தைகளின் ஆதார தெய்வமாக விளங்குபவர் அவர்.

ஒருமுறை பிரம்மா உறக்கத்தில் இருந்தபோது மதுகைடபர் என்ற அரக்கர்கள் பிரம்மா படைத்த வேதங் களை திருடிச் சென்று அதல பாதாளத்தில் ஒளித்து வைத்து விட்டனர். தூக்கம் கலைந்து எழுந்தபோது வேதங்களைக் காணாது பிரம்மா திடுக் கிட்டார். மகா விஷ்ணு விடம் முறையிட்ட தால் அவர் எப்படியும் மீட்டுத்தருவதாக உறுதி அளித்தார். அதற்காக மகாவிஷ்ணு ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து பாதாளம் வரை சென்று வேதத்தின் ஒரு பாடத்தில் உள்ள உத்கீதம் என்ற ஸ்வரத்தை உருவாக்கி அதன் வழியே வந்த அரக்கர்களை போரிட்டு அழித்தார். பின்னர் வேதங்களை மீட்டு வந்து பிரம்மாவிடம் ஒப்படைத்தார்.இதன்மூலம் கல்வி, கலை, ஞானத்தின் தெய்வங்களுக்கு எல்லாம் குருவாக ஹயக்ரீவர் விளங்குவது உறுதியாகி உள்ளது. எனவே இவரை வழிபட்டால் கல்வி, கேள்வி, ஞானம் பெறலாம் என்பது ஐதீகம்.

அவருடைய குதிரை முகம் சூரியனையும் வெல்லக்கூடிய ஆற்றல் மிக்க பேரொளியைப் பெற்றுள்ளதோடு நான்கு கைகளில் சங்கு, சக்கரம், பத்மமாலை, அபயம் என விளங்கும். அவர் லட்சுமி ஹயக்ரீவராக, வரத ஹஸ்த ஹயக்ரீவராக, அபயஹஸ்த ஹயக்ரீவராக, யோகஹயக்ரீவராக பலவித வடிவங்களிலும் விளங்குகிறார். கல்வியின் ஆக்கபூர்வ வளர்ச்சிக்கு தடையில்லாது பிள்ளைகள் அனைவரும் மன அமைதியுடன் கல்விகற்று சிறப்புடன் தேர்ச்சி அடைய ஹயக்ரீவர் துதி காயத்ரி மந்திரம் முதலியவற்றை தியானித்தல் அவசியமாகிறது.

கல்வியில் நல்ல உயர்நிலை பெறவும், உழைத்த உழைப்பு வீணா காமல் இருக்கவும், ஞாபகசக்தி வேண்டும். இதனை அருளுபவர் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர். இந்த நிலைபெற்ற ஐஸ்வர்யமான கல்விச் செல்வத்தைப் பெற செங்கல்பட்டு அருகே செட்டிப்புண்ணியத் தில் உள்ள லஷ்மி ஹயக்ரீவரை வழிபடலாம்.அறியாமை எனும் இருளில் இருந்து ஞானம் எனும் ஒளியை நோக்கி அழைத்து செல்லும் ஞான ஆசிரியனாக விளங்குபவர் ஹயக்ரீவர், கல்விக் கடவுளான சரஸ்வதிக்கே ஞானத்தை அருளியவர் (சரஸ்வதிக்கு ஒரே கோயில் திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ளது)கல்விச் செல்வத்துடன் பொருட் செல்வத்தையும் வழங்கும் விதமாக தனது மடியில் லட்சுமி தேவியுடன் அருள்பாலிக்கும் குதிரை முகமும், மனித உடலும் கொண்ட யோக தெய்வம் ஹயக்ரீவருக்கு தமிழகத்தில் பல இடங்களில் கோயில்கள் உள்ளன. இதில் கடலூர் அருகில் உள்ள திருவஹிந்திரபுரம் (திருவந்திபுரம்) லட்சுமி ஹயக்ரீவர் கோவில் உலகப்புகழ் பெற்றது.

சென்னைக்கு அருகில் காட்டாங் கொளத்தூரை அடுத்துள்ள செட்டிப் புண்ணியத்தில் கோவில் கொண்டுள்ள அருள்மிகு தேவநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள ஸ்ரீயோக ஹயக்ரீவர் சன்னதியில் அர்ச்சனை செய்து பூஜித்தால் கல்வியில் சிறந்து விளங்க முடியும் என இத்திருக் கோயில் தலபுராணம் கூறுகிறது. இந்த ஆலயத்தில் ஸ்ரீயோக ஹயக்ரீவர் வீற்றிருந்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி அருள் பாலித்து வருகிறார். ஆண்டுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கும், தொடர்ந்து உயர்கல்வி பெறுவதற்கும் மாணவ, மாணவிகள் இத்தலத்துக்கு வந்து வழிபடு கிறார்கள்.இத்தலத்துக்கு நேரில் வர இயலாதவர்கள் அருகில் உள்ள விஷ்ணு கோயி லில் உள்ள ஸ்ரீலஷ்மி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்துப் பிரார்த்தனை செய்து கொள்ள லாம். பள்ளி, கல்லூரிகளில் இறுதித்தேர்வின் போது, மாணவர் களுக்கு ஏற்படும் பயத்தைப் போக்கவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும், இப்பிரார்த்தனை பெரிதும் உதவுவதாகப் பயன்பெற்ற பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் செட்டிப் புண்ணியம் கோயிலில் வித்யா தோஷ நிவர்த்தி சங்கல்ப அர்ச்சனை பூஜை நடத்தப்படுகிறது. இதில் பேனா, பென்சில் வைத்து அர்ச்சனை செய்கின்றனர். பிறகு, பூஜையில் வைத்து அர்ச்சிக்கப்பட்ட ரட்சையை, முன்பதிவு செய்த மாணவர் களுக்கு கூரியரில் அனுப்பி வைக்கிறார்கள். அந்த ரட்சையைக் கையில் கட்டிக்கொண்டால், கல்வியில் மேன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை.கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் ஸ்ரீ தேவநாதனுடைய மற்றொரு அதி சுந்தரமான பிரயோக சக்கரத்துடன் சேவை தரும் திவ்யமங்கள விக்ரகத்தை எடுத்து வந்து செட்டிப்புண்ணியம் என்ற இவ்விடத்தில் எழுந்தருள வைத்தனர்.

இத்திருமூர்த்தி யுடன் ஸ்ரீயோக ஹயக்ரீ வரும் கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளார். தற்போது பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் ஹயக்ரீவரை வழிபட மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிறப்பு அர்ச்சனைகளும் நடத்தப்படுகின்றன.புதுவை முத்தியால் பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஆலய அர்ச்சகர் சம்பத்குமார் கூறும்போது, ஹயக்ரீவரை வழிபட்டால் கல்வி ஞானம் நன்கு வளரும். மாணவ, மாணவிகள் இவரை வழிபட்டால் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்.  நினைவாற்றல் அதிகரிக்கும். நல்ல சிந்தனை மேலோங்கும், தீய சிந்தனைகள் நம்மிடம் அணுகாது. மனதில் தெளிவு பிறக்கும். ஒழுக்கம் மேம்படும். மகாலட்சுமி வழிபாட்டால் அனைத்து செல்வங்களும் வந்து சேரும் என்றார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement