அஜீத்துக்கு ஜோடியாகிறார் ஸ்ருதி
வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் அடுத்து நடிக்கிறார் அஜீத். இதில் ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற பேச்சு கோலிவுட்டில் பரபரப்பாக வட்டமடித்துக்கொண்டிருக்கிறது. ‘வீரம்‘ படத்தில் அஜீத்துக்கு ஜோடிபோட்ட தமன்னாவே இப்படத்திலும் நடிப்பார் என்று கூறப்பட்டு வந்தது. அது உறுதியாகாத பட்சத்தில் சமந்தாவுக்கு வாய்ப்பு செல்கிறது என்று கூறப்பட்டது. இவர்கள் இருவரையும் முந்திக்கொண்டு ஸ்ருதிஹாசன் இந்த போட்டியில் ஊடுருவி இருக்கிறார். பூஜை படத்தில் விஷால் ஜோடியாக முதன்முறையாக இணைந்த ஸ்ருதி அடுத்து கார்த்தி நடிக்கும் தெலுங்கு படம் மூலம் அவருடன் முதன்முறையாக இணைகிறார். அந்த வரிசையில் அஜீத்துடன் முதன்முறையாக சிவா இயக்கும் படத்தில் இணைய உள்ளதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.