பட்டா கத்தியுடன் வந்த வாலிபர் கைது : கூலிப்படையா என்று போலீஸ் விசாரணை
தண்டையார்பேட்டை: சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ண பிரபு நேற்று இரவு புதுவண்ணாரப்பேட்டையில் ரோந்து சென்றார். அப்போது, வஉசி நகர் அருகே வாலிபர் ஒருவர் அந்த வழியாக நடந்து வந்தார். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை விரட்டி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த பட்டா கத்தி யை பறிமுதல் செய்தனர். அவர் எர்ணாவூரை சேர்ந்த பிரதீப் (25) என தெரியவந்தது. யாரையாவது கொலை செய்ய வந்தாரா அல்லது கூலிப்படையை சேர்ந்தவரா என பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.