கிராம யோஜனா திட்டத்தின் கீழ் திருவள்ளூர் அருங்கோலம் கிராமம் தத்தெடுப்பு
திருத்தணி: திருத்தணி அடுத்த அருங்கோலம் கிராமத்தை திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், கிராம யோஜனா திட்டத்தின் கீழ் தத்தெடுக்க தேர்வு செய்துள்ளார்.இதன்படி, ரூ. 5 கோடி மதிப்பில் கிராமத்தில் பல்வேறு நலதிட்டபணிகள் செய்யப்பட உள்ளன. இதன் முதல்கட்டமாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் உத்தரவின்பேரில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ராமநாதன் தலைமையில் மத்திய மற்றும் மாநில அரசு சார்ந்த ஒவ்வொரு துறைகள் சார்பில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல் அனைவரையும் வரவேற்று பேசினார். தாசில்தார் ரமேஷ்,திருவாலங்காடு ஒன்றிய ஆணையர் பிரசாத் முன்னிலை வகித்தனர்.