பாலிவுட்டுக்காக ரெடியாகும் அஜீத் படம்
சென்னை: மீண்டும் பாலிவுட்டுக்கு போகிறார் அஜீத்.ஷாருக்கான் நடிப்பில் சந்தோஷ் சிவன் இயக்கிய அசோகா இந்தி படத்தில் நடித்திருந்தார் அஜீத். அதன் பிறகு பாலிவுட் பக்கம் அவர் கவனம் செலுத்தவில்லை. அவர் நடிப்பில் வெளியான ‘ஆரம்பம்' படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பேச்சு நடந்தது. தற்போது அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பம் படத்தை இந்தியில் டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ‘பிளேயர் - எ கில்லாடி' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதற்கான டப்பிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. அடுத்த மாதம் இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி உள்ளார். அஜீத்துடன் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.