சுந்தர்.சி-யுவன் திடீர் லடாய்
சென்னை: சுந்தர்.சி. படத்திலிருந்து யுவன் சங்கர் ராஜா வெளியேறினார். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படம் ‘ஆம்பள. இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கவிருந்தார். ஏற்கனவே சுந்தர்.சியின் ‘வின்னர், விஷாலின் ‘சமர், ‘பூஜை படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். ஆனால் ‘ஆம்பள படத்திலிருந்து யுவன் வெளியேறி இருக்கிறார். சுந்தர்.சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் வெளியேறியதாக கூறப்படுகிறது.இதையடுத்து ‘ஆம்பள படத்துக்கு இசை அமைக்கும் பொறுப்பை 5 இசை அமைப்பாளர்களிடம் ஒப்படைக்க எண்ணி உள்ளார் இயக்குனர். ‘ஹிப் ஆப் தமிழா ஆதி, ஏ.ஆர்.ரகுமான் உதவியாளர் ஆகியோரும் இவர்கள் தவிர மேலும் 3 இசை அமைப்பாளர்களும் இசை அமைக்க உள்ளனர். வெவ்வேறு இசை அமைப்பாளர்கள் ஒரே படத்துக்கு இசை அமைக்கும் பாணி ஏற்கனவே கோலிவுட்டில் அரங்கேறியதுதான். சமீபத்தில் வெளியான பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் அல்போன்ஸ் ஜோசப், விஜய் ஆண்டனி, எஸ்.தமன், சி.சத்யா போன்றவர்கள் இசை அமைத்துள்ளனர். அதற்கு முன்னதாக வசந்த் இயக்கிய ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே படத்திற்கு 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர்.