ஒரே படத்தில் 5 ஹீரோயின்கள்
சென்னை: ‘அதிரடி படத்தில் 5 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இதுபற்றி இயக்குனர் பாலு ஆனந்த் கூறியது:அழிந்து வரும் சிலம்பம், களறி, வாள்வீச்சு, மான்கொம்பு போன்ற கலைகளை இளைஞர்களுக்கு சொல்லித்தரும் பயில்வானை மையமாக வைத்து படம் தயாரிக்க எண்ணுகிறார் ஒரு தயாரிப்பாளர். ஆனால் உடனிருப்பவர்கள் தயாரிப்பாளரை ஏமாற்றி பணத்தை விரயம் செய்கின்றனர். இதை முறியடித்து அப்படத்தை பயில்வான் முடித்து தருகிறாரா என்பதுதான் கதை. இதில் பயில்வானாக மன்சூர் அலிகான் நடிப்பதுடன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை ஆகிய பொறுப்பை ஏற்று தயாரிக்கிறார். சுரேஷ் ஒளிப்பதிவு.மேற்கு வங்கத்தை சேர்ந்த மவுமிதா சவுத்ரி, சஹானா, பூவிஷா, காவ்யா, காயத்ரி என 5 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் ராதாரவி, செந்தில் நடிப்பதுடன் மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்தில் 6 பாடல்கள் இடம்பெறுகிறது. இதன் ஷூட்டிங் சென்னையில் மீனவ குப்பங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் நடந்துள்ளது.