கறுப்பு கொடி போராட்டம் : என்எல்சியில் 300 பேர் கைது
நெய்வேலி: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் 29வது நாளாக இன்று நீடிக்கிறது. சென்னை சாஸ்திரி பவனில் நேற்று முன்தினம் (30ம் தேதி) நடக்கவிருந்த 7வது சுற்று பேச்சுவார்த்தை திடீரென மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இது ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர் கூட்டமைப்பினர் தலைமை அலுவலகத்துக்கு பணிக்கு செல்லும் அதிகாரிகளுக்கு வழிநெடுக நின்று கறுப்பு கொடி காட்டினர். கறுப்புக்கொடி காட்டிய ஒப்பந்த தொழிலாளர் கள் 300 பேரை நெய்வேலி டி.எஸ்.பி கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.