கூடுவாஞ்சேரி அருகே இளம்பெண் மாயம்
கூடுவாஞ்சேரி: சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரம் நெல்லிக்குப்பம் ரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் தனபால்(65). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தகுமாரி(55). இவர்களுக்கு மகன் பாலசுந்தர், மகள்கள் பிரியங்கா, சுகன்யா, மோனிகா ஆகியோர் உள்ளனர். இதில் பிரியங்கா(24), நந்திவரத்தில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த ஒரு ஆண்டாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதனால் பயந்து போன சாந்தகுமாரி நேற்று கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் வழக்கு பதிவு செய்து மாயமான பிரியங்காவை யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.