Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
19
Jul
இங்கிலாந்து தடுமாற்றம் முன்னிலை பெறுமா இந்தியா?


லார்ட்ஸ் டெஸ்டில் 2வது நாளான நேற்று ஆட்ட  நேர இறுதியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டை இழந்து 219 ரன் எடுத்திருந்தது. ஆட்டமிழக்காமல் பிரியர் 2, புளங் கெட் 4 ரன்களுடன் இருந்தனர்.முன்னதாக முதல் இன்னிங்சை 290 ரன்னுக்குத் தொடங்கிய இந்தியா 295 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு அட்டகாசமாக இருந்தது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் திண்டாடிப் போயினர். குறிப்பாக புவனேஸ்வர் ஸ்விங் பந்து வீச்சில் கலக்கினார்.ஷமி, இஷாந்த், பின்னியும் ஓரளவுக்குக் கட் டுக் கோப்பாக வீசினர். இத னால் அந¢த அணி சிரமப்பட்டே ரன்களை சேகரித் தது. அசாத்திய பொறுமையுடன் ஆடிய பேலன்ஸ் 110 ரன்  எடுத்து அசத்தி னார். இந்திய அணி தரப் பில் புவனேஸ்வர் குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது. இதில் இங்கிலாந்து அணியை விரைவாக வீழ்த்தும் பட்சத்தில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புள் ளது. அதே சமயம் டிரெண்ட் பிரிட்ஜ் டெஸ்ட் டைப் போல் கோட்டை விட்டால் இங்கிலாந்து அணி இந்தியாவை முந்தி ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடும். எனவே இன்றைய ஆட்டத்தில், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை முந் தாமல் முடக்க வேண்டிய நெருக்கடி இந்திய பவுலர்களுக்கு ஏற்பட்டுள்ளது.


கேப்டன் தோனி சாதனை


இங்கிலாந்து வீரர் பேலன்ஸ் 32 ரன்னில் கொடுத்த கேட்ச்சை தோனி தவற விட்டார். ஆனாலும் நேற்றைய ஆட்டத்தில் 3 கேட்ச் பிடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து&இந்திய அணி இடையிலான டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி செய்துள்ளார். லார்ட்ஸ் ஆட்டம் தோனிக்கு 18வது டெஸ்ட். இதில் 52 கேட்ச், 4 ஸ்டம்பிங் செய்துள்ளார். அதே சமயம் இங்கிலாந்து கீப்பர் மேட் பிரியர் 15 டெஸ்டில் 45 கேட்ச், 2 ஸ்டம்பிங் செய்துள்ளா

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement