ரியல் மாட்ரிட் அணியில் சேர்ந்தார் டோனி கிராஸ்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணியில் இடம் பெற்ற வீரர்களை, தங்களது அணியில் சேர்க்க பல்வேறு நாடுகளின் கிளப்புகள் போட்டாபோட்டியில் இறங்கியுள்ளன. உலகிலேயே மிகவும் பணக்கார கால்பந்து கிளப்பாகத் திகழும் ரியல் மாட்ரிட் கிளப், உலகின் தலைசிறந்த வீரர்களை இழுத்துக் கொள்வதில் எப்போதும் முன்னிலை வகிக்கும். தற்போது ஜெர்மனி நடுகள ஆட்டக்காரர் டோனி கிராஸை தங்களது பக்கம் இழுத்துள்ளது ரியல் மாட்ரிட். ஜெர்மனி நாட்டில் உள்ள கிளப்பான பேயர்ன் மியூனிச் கிளப்பில் தனது 16வது வயதில் இருந்து விளையாடி வந்த டோனி கிராஸ், அதில் இருந்து விலகி ரியல் மாட்ரிட் கிளப்பில் சேர்ந்துள்ளார்.