செம்மரக்கட்டை விவகாரம் சரவணன் மனைவிக்கு ஜாமீன்
வேலூர்: வேலூர் காட்பாடியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த மே மாதம் 25ம்தேதி கோடிக்கணக்கில் பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்ட வழக்கில் சரண் அடைந்த கரகாட்டக்காரி மோகனாம்மாள், அவரது அக்காள் நிர்மலா, இவரது மகன் சரவணன் ஆகியோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களுக்கும், மேலும் சில அரசியல் பிரமுகர்களுக்கும் செம்மரக்கட்டை கடத்தல் கும்பலுடன் உள்ள தொடர்பு தெரிய வந்தது. கரகாட்டக்காரி மோகனாம்மாள், அவரது கூட்டாளிகள் நிர்மலா, சரவணன் ஆகியோர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், செம்மர கடத்தல் கூலிப்படையை சேர்ந்த சரவணனின் மனைவி மதுபாலாவையும் போலீசார் கைது செய்து வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர். மோகனாம்மாள், சரவணன், நிர்மலா ஆகியோருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில், மதுபாலாவுக்கு நேற்று ஜாமீன் கிடைத்துள்ளது.