Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
14
Jul
மாதவனின் கெஸ்ட்டாக தனுஷ்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: மாதவன் நடிக்கும் இந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் தனுஷ்.தமிழில் கடந்த 2012ம் ஆண்டு ‘வேட்டை படத்தில் நடித்து முடித்த மாதவன் பிறகு பாலிவுட்டில் கவனம் செலுத்த தொடங்கினார். 2 இந்தி, 1 ஹாலிவுட் என 3 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மாதவன் நடித்த ‘தனு வெட்ஸ் மனு என்ற இந்தி படத்தை இயக்கிய ஆனந்த் ராய் அப்படத்தின் 2ம் பாகம் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த ‘ராஞ்சனா என்ற இந்தி படத்தை இயக்கியவர். தனுஷும், ஆனந்த் ராயும் மீண்டும் புதிய படத்தில் இணைந்து பணியாற்ற திட்டமிட்டிருக்கின்றனர். முன்னதாக மாதவன் நடிக்கும் ‘தனு வெட்ஸ் மனு 2ம் பாகத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க தனுஷிடம் கேட்டிருக்கிறார் இயக்குனர். அவரும் ஓ.கே. சொல்லி இருக்கிறார். கமல், ரஜினிக்கு பிறகு இந்தியில் வெற்றி பெற்ற கோலிவுட் ஹீரோக்களாக வலம் வந்துகொண்டிருப்பவர்கள் மாதவன்-தனுஷ் ஆகிய இருவர் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement