சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா என்.ஆர்.தனபாலன் பங்கேற்பு
சென்னை: குன்றத்தூரில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ஸ்ரீ அய்யனார் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா இன்று நடந்தது. விழாவுக்கு பம்மல் வியாபாரிகள் சங்கத்தின் அமைப்பாளர் எஸ்.பி.ரூபன் இன்பராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவர் என்.டி.மோகன், மாவட்ட துணைத் தலைவர் பா.டில்லி உண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலந்து கொண்ட பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைத்தார். அப்போது பல்லாவரம் வட்டார நாடார் ஐக்கிய சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.தனம்(எ) ராமச்சந்திரன் சூப்பர் மார்க்கெட்டின் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். சூப்பர் மார்க்கெட்டின் நிறுவனர் பி.ஆனந்தவள்ளி பூப்பாண்டியன், ஆர்.குமரன், ஏ.என்.மூர்த்தி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.