தண்டையார்பேட்டை: சென்னை புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் சேகர் (55). மனைவி கற்பகம் (50). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். நேற்றிரவு வீட்டில் தனியாக இருந்த கற்பகம், திடீரென உடல் முழுவதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டு வெளியே ஓடி வந்தார். அக்கம் பக்கத் தினர் அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை கற்பகம் பரிதாபமாக இறந்தார்.