விவசாயிகளுக்கு தனி டிவி சேனல்
நடப்பு ஆண்டில் விவ சாயிகளுக்கு ரூ.8 லட்சம் கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான தனி டி.வி. சேனல் தொடங்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் சமூக ரேடியோ நிலையங்கள் அமைக்கப்படும். தேசிய ஊரக இன்டர்நெட் தொழில்நுட்ப இயக்க திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு. ஜார்கண்ட் மற்றும் அசாமில் வேளாண் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும். வேளாண் உள்கட்டமைப்பு நிதிக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படும். ஆந்திர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் வேளாண் பல்கலை அமைக்க ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரியானா மற்றும் தெலங்கானாவில் தோட்டக்கலைத்துறை பல்கலை கழகம் அமைக்கப்படும். விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த மண் பரிசோதனை குறித்த ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 4 சதவீத விவசாய வளர்ச்சியை எட்ட அரசு உறுதி பூண்டுள்ளது. சாகுபடிகளை பெருக்க புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும். 5 லட்சம் நிலமற்ற விவசாயிகளுக்கு நபார் வங்கி மூலம் கடன் உதவி ஏற்பாடு செய்யப்படும். உள்நாட்டு கால்நடைகள் இனப் பெருக்கம் மற்றும் உள்நாட்டு மீன்வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.