பிரேசில் சென்றார் நடிகர் மோகன்லால்
திருவனந்தபுரம்: பிரேசிலில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. பெரும் பரபரப்புடன் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் ஜெர்மனியிடம் பிரேசில் பரிதாபமாக தோற்றது. நாளை அதிகாலை 1.30 மணியளவில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினாவுடன் நெதர்லாந்து அணி மோதுகிறது. இறுதிப் போட்டி ரியோ டி ஜெனிரோவில் வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. இறுதிப் போட்டியை நேரில் கண்டுகளிப்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் வி.ஐ.பி.க்கள் உட்பட ஏராளமனோர் பிரேசிலில் குவிந்து வருகின்றனர். பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன்லாலும் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக நேற்று பிரேசிலுக்கு புறப்பட்டு சென்றார்.