பணவீக்கம் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை: ரிசர்வ் வங்கி கவர்னர் உறுதி
மீனம்பாக்கம்: இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நேற்றிரவு 11.45 மணிக்கு மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ரிசர்வ் வங்கியின் நிர்வாக கூட்டம் சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது. அதில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன். நமது நாட்டில் அதிகரித்து வரும் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசுடன் இணைந்து ரிசர்வ் வங்கியும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பண வீக்கத்தை 8 சதவீதமாக கட்டுக்குள் கொண்டு வந்து விடுவோம். அடுத்த ஆண்டு இறுதிக்குள் மேலும் கட்டுப்படுத்தி 6 சதவீதமாக குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.